பாரா டிடியில் 2 பதக்கம்

காமன்வெல்த் மாற்றுத்திறனாளிகளுக்கான மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பவினா ஹஸ்முக்பாய் படேல் தங்கப் பதக்கமும், சோனல்பென் மனுபாய் படேல் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.

ஒற்றையர் இறுதிப் போட்டியில் நைஜீரியாவின் கிறிஸ்டியானா இக்பெயோயி உடன் மோதிய பவினா 12-10, 11-2, 11-9 என்ற நேர் செட்களில் வென்று முதலிடம் பிடித்தார். கிறிஸ்டியானா வெள்ளிப் பதக்கம் பெற்றார். 3வது இடத்துக்கான மோதலில் இங்கிலாந்தின் சூ பெய்லியை எதிர்கொண்ட சோனல்பென் 11-5, 11-2, 11-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்.

Related Stories: