மகளிர் ஈட்டி எறிதலில் அன்னு ராணி அசத்தல்

காமன்வெல்த் மகளிர் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி வெண்கலப் பதக்கம் வென்றார். ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கெல்சி லீ பார்பர் (64.43 மீ.) தங்கப் பதக்கமும், மெக்கன்ஸி லிட்டில் (64.27 மீ.) வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். அன்னு ராணி 60.00 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து 3வது இடம் பிடித்தார். இறுதிப் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை ஷில்பா ராணிக்கு (54.62 மீ.) 7வது இடம் கிடைத்தது.

Related Stories: