×

மும்முறை தாண்டுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி

காமன்வெல்த் ஆண்கள் மும்முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்ப்) இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் எல்தோஸ் பால் தங்கப் பதக்கமும், அப்துல்லா அபூபக்கர் வெள்ளிப் பதக்கமும் வென்று வரலாற்று சாதனை படைத்தனர். எல்தோஸ் 17.03 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்த நிலையில், அப்துல்லா 17.02 மீட்டர் தூரம் தாண்டி 2வது இடம் பிடித்தார்.

பெர்முடாவின் ஜா பெரின்சீப் (16.92 மீ.) வெண்கலம் வென்றார். காமன்வெல்த் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் இந்தியா ஏற்கனவே 4 முறை பதக்கம் வென்றிருந்தாலும், ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி என 2 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Tags : India , Gold, silver for India in triple jump
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!