×

மகளிர் பேட்மின்டன்; பைனலில் சிந்து.! லக்‌ஷியாவும் முன்னேற்றம்

பர்மிங்காம்,: காமன்வெல்த் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றார். அரையிறுதியில் சிங்கப்பூர் வீராங்கனை ஜியா மின் யிவோவுடன் நேற்று மோதிய சிந்து 21-19, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். மற்றொரு அரையிறுதியில் கனடாவின் மிஷெல் லி 2-1 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை வீழ்த்தினார். தங்கப் பதக்கத்துக்காக இன்றைய பைனலில் சிந்து - மிஷெல் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் லக்‌ஷியா சென் 21-10, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் ஜியா ஹெங் தேஹை போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் களமிறங்கிய இந்திய வீரர் கிடாம்பி காந்த் 21-13, 19-21, 10-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ட்ஸே யாங்கிடம் வீழ்ந்தார். இன்றைய பைனலில் லக்‌ஷியா - ட்ஸே யாங் மோதுகின்றனர்.

Tags : Sindhu ,Lakshya , Women's Badminton; Sindhu in the final. Lakshya is also an improvement
× RELATED இதில் அவளுடைய தப்பு எதுவும் கிடையாது!