×

கேரளாவில் ஹெல்மெட்டில் கேமரா வைக்க தடை

திருவனந்தபுரம்: கேரளாவில்  சமீப காலமாக இருசக்கர வாகன ஓட்டுநர்கள் ஹெல்மெட்டில் கேமரா வைத்து சாகசத்தில்  ஈடுபடுகின்றனர். அதிவேகமாக பைக்கில் சென்று அதை படம் பிடித்து சமூக  வலைதளங்களில் பகிர்கின்றனர். இவ்வாறு செல்பவர்கள் விபத்தில் சிக்கி  உயிரிழப்பது அதிகரித்து வந்தது.

இதையடுத்து இரு சக்கர வாகனங்களில்  செல்பவர்கள் ஹெல்மெட்டில் கேமரா வைக்க மோட்டார் வாகனத்துறை தடை விதித்து  உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி கேமரா பயன்படுத்துவது தெரிந்தால் ₹1000  அபராதமும், 3 மாதத்திற்கு லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று மோட்டார்  வாகனத்துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala , Helmet cameras banned in Kerala
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...