×

கனமழை எதிரொலியாக இடுக்கி அணை திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

திருவனந்தபுரம்: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாகவும், தமிழகத்தின் நீராதாரமான முல்லை பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 2,400 கனஅடிக்கு மேல் உபரி நீர் திறப்பதினாலும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல்மட்டத்திலிருந்து 2,403 அடி உயரம் கொண்ட இடுக்கி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 2,384.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,342 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இடுக்கி அணையின் உபரி நீர் வெளியேறும் 3-வது மதகு திறக்கப்பட்டு வினாடிக்கு 1,776 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இடுக்கி அணை நிரப்புவதற்கு 19 அடி மீதம் உள்ள நிலையில் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மாலை மற்றும் முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர்திறப்பு ஆகியவற்றால் இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது.  
இதனால் முல்லை பெரியாறு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Idukki Dam , Heavy rain echoes the opening of Idukki Dam: Flood warning for coastal people!!
× RELATED பெரியாறு அணைக்கு வரும் நீர் இடுக்கி...