காட்பாடி அருகே சேவூரில் ஐ.எப்.எஸ். நிறுவனத்தின் முகவர் தூக்கிட்டு தற்கொலை

வேலூர்: காட்பாடி அருகே சேவூரில் ஐ.எப்.எஸ். நிறுவனத்தின் முகவர் வினோத்குமார் (28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐ.எப்.எஸ். நிறுவனத்துக்கு முகவர் வினோத்குமார் ரூ.50 லட்சம் வசூலித்து கொடுத்துள்ள நிலையில் தற்கொலை செய்துள்ளார். பணம் செலுத்தி சில மாதங்கள் ஆன நிலையில் 2 மாதமாக வட்டித் தொகை வழங்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பணம் கொடுத்தவர்கள் வினோத்குமாரிடம் வட்டித் தொகை கேட்டு வந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டார். ரூ. 1 லட்சம் கொடுத்ததால் மாதம் ரூ. 8000 தருவதாகக் கூறி ஐ.எப்.எஸ். நிறுவனம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளது என புகார் தெரியவந்துள்ளது.

Related Stories: