சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் நடந்த 56வது சூப்பர் டிவிஷன் ஹாக்கி லீக் தொடரின் பைனலில் ஐஓபி - ஐசிஎப் அணிகள் நேற்று மோதின. ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்ததை அடுத்து, ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டதில் ஐசிஎப் 4-3 என்ற என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஐசிஎப் அணிக்கு கோப்பை மற்றும் கேடயங்களை எம்.எல்.ஏ பரந்தாமன் வழங்கி வாழ்த்தினார். உடன் சிறப்பு அழைப்பாளர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளனர்.