உலக யு-20 தடகளம் வெள்ளி வென்றார் செல்வா திருமாறன்

காலி: உலக யு-20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் செல்வா திருமாறன் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். கொலம்பியாவில் நடந்த இந்த தொடரில், இந்தியா சார்பில் களமிறங்கிய திருமாறன்(17வயது), பைனலில் 16.15 மீட்டர் தாண்டி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜமைக்காவின் ஜேடன் ஹிப்பெர்ட் (17.27 மீ.) தங்கம், எஸ்டோனியாவின் விக்டர் மோரோசோவ் (16.13 மீ.) வெண்கலம் வென்றனர். இந்தத் தொடரில் ஏற்கனவே கலப்பு 4X400 மீ. தொடர் ஓட்டத்தில் வெள்ளி, மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருந்த இந்தியா பதக்கப் பட்டியலில் 24வது இடம் பிடித்தது.

Related Stories: