×

சான்ட்னர் சரவெடியில் நியூசிலாந்து அசத்தல்

தி ஹேக்: நெதர்லாந்துக்கு எதிரான 2வது டி20ல் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 2-0 என தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.
நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து முதல் டி20ல் 16 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த 2வது  ஆட்டத்தில் டாஸ் வென்று களம்  கண்ட நெதர்லாந்து 20 ஓவர் முடிவில்  4 விக்கெட் இழப்புக்கு  147 ரன் எடுத்தது. பாஸ் டி லீட்  ஆட்டமிழக்கமல் 53 ரன் (48 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். ஸ்டீபன் மைபர்க் 24, டாம் கூப்பர் 26, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 26* ரன் எடுத்தனர். நியூசி. தரப்பில் பிரேஸ்வெல் 2, டிக்னர், சோதி தலா 1 விக்கெட் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய நியூசி. அணியின் தொடக்க வீரர்கள் கப்தில் 2 ரன், பின் ஆலன் 13 ரன்னில் வெளியேறினர். எனினும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் - டேரில் மிட்செல் இணைந்து 3வது விக்கெட்டுக்கு அதிரடியில் இறங்க, நியூசிலாந்து  14 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து அபாரமாக வென்றது. சான்ட்னர்  77 ரன் (42 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), டேரில் 51 ரன்னுடன் (27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.


Tags : New Zealand ,Santner , New Zealand freaks in Santner cannonball
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்