×

அமெரிக்காவை வீழ்த்தியது இந்தியா-2

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவு 8வது சுற்றில் பலம் வாய்ந்த அமெரிக்க அணியை நேற்று எதிர்கொண்ட இந்தியா-2 அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது. இந்திய வீரர்கள் குகேஷ், சாத்வனி ரவுனக் வெற்றி பெற்று தலா 1 புள்ளிகள் பெற்ற நிலையில், பிரக்ஞானந்தா மற்றும் சரின் நிஹல் தங்கள் போட்டிகளை டிரா செய்து தலா அரை புள்ளி பெற்றனர். மற்றொரு ஓபன் பிரிவு 8வது சுற்றில் அர்மேனியாவுடன் மோதிய இந்தியா-1 அணி 1.5க்கு 2.5 என்ற புள்ளிக் கணக்கில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.

 இந்தியா சார்பில் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, எரிகைசி அர்ஜுன், எஸ்.எல்.நாராயணன் ஆகியோர் டிரா செய்த நிலையில், அர்மேனியாவின் சர்கிஸ்ஸியன் கேப்ரியலுடன் மோதிய ஹரிகிரிஷ்ணா பென்டாலா தோற்றது பின்னடைவை கொடுத்தது. பெரு அணியுடன் 8வது சுற்றில் நேற்று மோதிய இந்தியா-3 அணியும் 1-3 என்ற கணக்கில் போராடி தோற்றது. எஸ்.பி.சேதுராமன் மற்றும் கார்த்திகேயன் முரளி தங்கள் ஆட்டங்களில் டிரா செய்த நிலையில், சூரிய சேகர் கங்குலி, அபிஜீத் குப்தா தோல்வியடைந்தனர்.

Tags : India ,USA , India defeated USA-2
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...