×

ரூ.79 லட்சம் கோடி; பொருளாதார இலக்கு யோகிக்கு ஆலோசனை வழங்க அமெரிக்க நிறுவனம் நியமனம்

லக்னோ: உத்தரப் பிரதேச அரசின் பொருளாதார ஆலோசகராக, அமெரிக்காவை சேர்ந்த டெலாய்ட் இந்தியா நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசு, தனது மாநிலத்தில் 100 லட்சம் கோடி டாலர் (ரூ.765 லட்சம் கோடி) பொருளாதார இலக்ைக, வரும் 2027ம் ஆண்டுக்குள் அடைய திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஜூலை 19ம் தேதி யோகி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இதில், இந்த இலக்கை எட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக, அமெரிக்காவை சோர்ந்த ‘டெலாய்ட் இந்தியா’நிறுவனத்தை ஆலோசகராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இது குறித்து யோகி கூறுகையில், ‘2027ம் ஆண்டுக்குள் உத்தரப் பிரதேசம் ஒரு டிரில்லியன் டாலர் (ரூ.79 லட்சம் கோடி) பொருளாதார இலக்கை அடையும். அடுத்த 90 நாட்களுக்குள் டெலாய்ட் இந்தியா துறை வாரியாக ஆய்வு செய்து எதிர்கால செயல்திட்டத்தை தயார் செய்யும்,”என்றார்.


Tags : US ,Yogi , Rs.79 lakh crore; US firm appointed to advise Yogi on Economic Target
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...