காஞ்சிபுரத்தில் இன்று 8வது தேசிய கைத்தறி தின விழா; அமைச்சர் தா மோ.அன்பரசன் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 8-வதுதேசிய கைத்தறி தின விழா காஞ்சிபுரம் பாபு திருமண மண்டபத்தில் இன்று 7ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்குகிறார். கைத்தறித்துறை துணை இயக்குனர் தெய்வானை முன்னிலை வைக்கிறார்.

இதில் சிறப்பு விருந்தினராக  சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் அமைச்சர் தா.மோ அன்பரசன்  கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இதில் எம்பிக்கள் டி. ஆர். பாலு,  ஜி. செல்வம், எம்எல்ஏக்கள் க. சுந்தர்,  ஏழலரசன், செல்வப் பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். முடிவில் முருகன் பட்டு கூட்டுறவு சங்க உதவி இயக்குனர் விஸ்வநாதன் நன்றி கூறுகிறார்.

Related Stories: