தேசிய ஜம்ப் ரோப் போட்டி தங்கம் வென்ற காஞ்சி மாணவிக்கு பாராட்டு

காஞ்சிபுரம்: கர்நாடக மாநிலம் ஹாஸ்பட் நகரில் தேசிய அளவிலான ஜம்ப் ரோப் போட்டிகள் 3 நாட்கள் நடந்தது. இதில்,  பல்வேறு மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் இனியா (15) என்பவரும் கலந்து கொண்டார். 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பங்கேற்ற இனியா, வெற்றிபெற்று தங்கம் வென்றார்.

இதைத்தொடர்ந்து இனியா, தாய்லாந்து நாட்டில் நடக்க இருக்கும் சர்வதேச ஜம்ப் ரோப் போட்டியில் பங்கேற்க உள்ளார். ஜம்ப் ரோப் போட்டியில் தங்கம் வென்று சாதனைபடைத்த  மாணவி இனியாவை பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருண்குமார், மேலாளர் ரமேஷ், தலைமை

ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Related Stories: