இலவச கால்நடை மருத்துவமுகாம்

பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அருகே  கேசவராஜ்குப்பத்தில் கால்நடை பராமரிப்புத் துறை, பொதட்டூர்பேட்டை இந்தியன் வங்கி கிளை இணைந்து கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், திருத்தணி கோட்ட கால்நடை உதவி  இயக்குநர் டாக்டர். தாமோதரன் தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.ஏ.சீனிவாசன் பங்கேற்று முகாம் தொடங்கிவைத்தார்.

இந்த முகாமில், கால்நடைகளுக்கு  சிகிச்சை, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கைமுறை கருவூட்டுதல் மற்றும்  தாது உப்பு வழங்கல் உட்பட மொத்தம் 1671  கால்நடைகள் பயனடைந்தன. முகாமில் கால்நடை ஆய்வர்கள் பார்த்தசாரதி, ஸ்டாலின், உட்பட  கால்நடை வளர்ப்போர் பங்கேற்றனர்.

Related Stories: