×

உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவள்ளூர்: உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி  திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்தில் உள்ள கச்சூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் இராமசந்திரா பல்கலைகழக ஊட்டசத்துவியல் துறை  இணைந்து உலக தாய்ப்பால் தின விழா  பூண்டி ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இராமச்சந்திரா பல்கலைகழகத்தின் ஊட்டச்சத்துவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஹேமமாலினி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் எழிலரசி மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் இயக்குனர் ஸ்டீபன் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியின் போது  குழந்தை பிறந்தவுடன் அரை மணிநேரத்தில் பால்(சீம்பால்) கொடுக்க வேண்டும் என்றும் பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தாய்ப்பால் தான் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் என்றும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் என்றும், தாய்க்கும் சேய்க்கும் பிணைப்பை ஏற்படுத்தும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. உள்ளூரில் கிடைக்கும் தானியங்களை வைத்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு அதன் முக்கியத்துவத்தை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. இறுதியில் குழந்தைகளின் கரங்களால் கேக் வெட்டி அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாலுட்டும் தாய்மார்கள் 50-க்கும் மேற்பட்டோர், அங்கன்வாடி பணியாளர்கள், இராமச்சந்திரா பல்கலைகழகத்தின் விரிவுரையாளர் நந்திதா, கிராம சுகாதார செவிலியர் ஆலிஸ் விக்டோரிய , ஐ.ஆர்.சி.டி.எஸ் கள ஒருங்கிணைப்பாளர்கள் தினகரன், பூங்கொடி, தபித்தாள், கலையரசி, கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

Tags : World Breastfeeding Week Awareness Program
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...