நெமிலி அருகே பிரேக் பிடிக்காமல் விபத்து; ரயில் தண்டவாளத்தில் காஞ்சிபுரம் பஸ் ஏறியது: பயணிகள் உயிர் தப்பினர்

நெமிலி: காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி சென்ற தனியார் பஸ் பிரேக் பிடிக்காமல், ரயில்வே தண்டவாளத்தில் ஏறிய நிலையில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் ரயில்வே தண்டவாளம் அருகே  நேற்று மதியம் காஞ்சிபுரத்திலிருந்து திருத்தணி நோக்கி தனியார் பஸ் சென்றது. அப்போது திடீரென  பிரேக் பிடிக்காததால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் எதிரே வரும் வாகனத்தில் மோதிவிடும் என்ற அச்சத்தில் டிரைவர் ரயில்வே தண்டவாளத்தில் பஸ்சை ஏற்றினார். அப்போது ரயில் வராததாலும், மின்கம்பி பஸ்சின் மீது படாததாலும் பயணிகள்  அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: