கூட்டுறவு சங்கத்தின் பரிந்துரையின்றி மத்திய வங்கியால் நேரடியாக கடனை அனுமதிக்க முடியாது: தலைவர் சஸ்பெண்ட் ரத்து

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே செய்யாமங்கலத்தைச் சேர்ந்த வரதராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், புதுக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக 2018ல் தேர்வு செய்யப்பட்டேன். போர்வெல் கிணறு அமைக்க ஒருவருக்கு  ரூ.4 லட்சம் கடன் தருமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியது. சங்கத்தின் தீர்மானமின்றி கடன் வழங்க கூறியதற்கு நான் ஒத்துழைக்காததால் என்னை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். இதை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: சங்கத்தின் பரிந்துரையின்றி, கடன் தொகையை மத்திய வங்கியால் நேரடியாக அனுமதிக்க முடியாது. இங்கு சங்கத்தின் தீர்மானமின்றி மத்திய வங்கியில் இருந்து இயந்திரத்தனமாக நேரடியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. கடன் வழங்க மறுத்ததாகக் கூறி மனுதாரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சங்கத்தின் நலன் கருதியே மனுதாரர் மறுத்துள்ளார். எனவே, சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

Related Stories: