ஒன்றிய அரசை கண்டித்து 9ம் தேதி வேலைநிறுத்தம்: மின்வாரிய தொழிற்சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘ஒன்றிய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்த மின்சார சட்ட திருத்த மசோதா 2022 தாக்கல் செய்வதை அறிந்த தேசிய மின்சார தொழிலாளர் பொறியாளர் கூட்டமைப்பு சார்பாக டெல்லியில் கடந்த 2ம் தேதி கூடி விவாதித்தது.

அதனடிப்படையில், ‘மின்சார சட்ட திருத்த மசோதா 2022 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தின் 80ம் ஆண்டு நினைவு நாளான ஆகஸ்ட் 9ஐ முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் நாளில் நாடு முழுவதும் பணி முடக்கம் செய்வது’ என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தாக்கல் செய்யப்படும் நாளில் தமிழக மின்வாரிய பணியாளர்கள், உடனடியாக பணி நிறுத்தம் செய்வர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: