மனித உரிமை காகிதத்தில் மட்டும் இருக்க கூடாது: ஆணைய தேசிய தலைவர் வலியுறுத்தல்

சென்னை: மனித உரிமை என்பது காகிதத்தில் மட்டும் இருந்துவிடாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ேதசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அருண் மிஸ்ரா வலியுறுத்தினார். தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழாவில் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி அருண் மிஸ்ரா பேசியதாவது: மனித உரிமை என்பது அனைத்து மக்களுக்கும் தேவை. ஒவ்வொரு குடிமகனின் உரிமையும் கவனிக்கப்பட வேண்டும். சமநீதி மிக முக்கியமானது. நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து அன்புடன் வாழ வேண்டும். இந்தியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே உலகமயமாக்கல் வந்துவிட்டது. மகாபாரதத்தில் மக்களின் உரிமை குறித்து கூறப்பட்டுள்ளது. மனித உரிமை நமது கலாச்சாரமாக உள்ளது. இதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

மனித உரிமைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை மாநில அரசுகள் அதற்காக செலவு ெசய்ய வேண்டும். ஒரு சில அதிகாரிகள் மட்டும் என்றில்லாமல் அனைத்து அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட வேண்டும். மனித உரிமை என்பது காகிதத்தில் மட்டும் இருந்துவிடாமல் செயல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: