×

2ம் கட்ட கொரோனா தடுப்பூசி 13 சதவீதம் செலுத்தி இந்தியாவிலேயே சென்னை முதலிடம்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் தவணை 13% செலுத்தி நாட்டிலேயே, சென்னை முதலிடத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை அதாரிகள் கூறினர். தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலையை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் ஒரே வழி என்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இதனால், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை, சென்னைக்கு அடுத்ததாக திண்டிவனத்தில் 9 சதவீதம் பேர் 2ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 1.12 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 77 ஆயிரத்து 116 ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனினும் தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் கொரோனா 2ம் கட்ட தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை சென்னையில் 13 சதவீதமாக உள்ளது. இது இந்திய அளவில் முதலிடம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்….

The post 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி 13 சதவீதம் செலுத்தி இந்தியாவிலேயே சென்னை முதலிடம்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,India ,Health Department ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனைகளில் பணியில் சேராத 193...