×

காபூல் குண்டுவெடிப்பில் 8 பேர் பரிதாப பலி: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி அருகே வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர். தகவலின்படி, மசூதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்த போது, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதுகுறித்து காபூலின் காவல்துறைத் தலைவரின் தலிபான் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் கூறுகையில், ‘மேற்கு காபூலில் சர்-இ-கரேஸ் பகுதியில் வெடிகுண்டு வெடித்தது. இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய (ஐஎஸ்ஐஎஸ்) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

குண்டுவெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்’ என்றார். ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பயங்கரவாதிகள் கடந்த 2014ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றனர். தற்போது தலிபான்கள் ஆட்சி நடக்கும் நிலையில், அவர்களுக்கு சவால் விடும் வகையில் ஐஎஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருவதால் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக வாழும் ஷியா சமூகத்தினர் அச்சத்துடன் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kabul ,IS , 8 killed in Kabul blast: IS claims responsibility
× RELATED பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை...