'நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று நாம் சமத்துவம் பேசுவது தேச விரோதமா?'... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

சென்னை: நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று நாம் சமத்துவம் பேசுவது தேச விரோதமா என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்; கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நான் சில நாட்கள் வெளியூர் பயணங்களை தவிர்க்க மருத்துவர்கள் பரிந்துரை செய்ததால் என்னால் நேரில் வர இயலவில்லை. ஆனால் இம்மாநாட்டை திருப்பூரில் நடத்துவதாக முத்தரசன் கூறியபோது மகிழ்ந்தேன். மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது இந்த நாட்டிற்கு காந்தி நாடு என பெயர் வையுங்கள் என கூறியவர் தந்தை பெரியார்.

அவர் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்தில் அவரோடு இணைந்து பணியாற்றியவர் தோழர் ஜீவானந்தம். காந்தியும், ஜீவாவும் சந்தித்த சிவகங்கை மாவட்டம் சிராவயல் என்ற இடத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்படும். சமூக நல்லிணக்கத்தை கெடுப்பது, மாநில உரிமைகளை பறிப்பது என இந்திய நாட்டுக்கு 2 மாபெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன; சமூக நல்லிணக்கத்துடன் இந்தியா இருப்பதை ஒரு சிலர் விரும்பவில்லை. அனைவரையும், மொழிகளையும், மத வழிபாட்டு தலங்களையும் ஒன்றாக பாருங்கள், நடத்துங்கள் என நாம் கேட்பதால் தேசவிரோதிகள் என்கிறார்கள்.

முதலமைச்சராக நான் நானாக அமர்ந்துவிடவில்லை, தோழமைக்கட்சிகளால் அமர்ந்துள்ளேன். நாணயத்திற்கு இரு பக்கம் போல வளர்ச்சித் திட்டமும், சமுக மேம்பாடும் அவசியம் - அதுவே திராவிட மாடல். திராவிடம் என்பது தமிழக அரசின் சமத்துவத்தை உணர்த்தி நிற்கும் சொல் இவ்வாறு கூறினார்.

Related Stories: