×

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்: 10,000 மீட்டர் நடை ஓட்டத்தில் மகளிர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பிரியங்கா!!

பர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பதக்கவேட்டை தொடர்கிறது. நேற்று ஒரே நாளில் மல்யுத்தத்தல் 3 தங்கம் ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 6 பதக்கத்தை அள்ளியது. இந்நிலையில் இன்று காமன்வெல்த் 10,000 மீட்டர் நடை ஓட்டத்தில் மகளிர் பிரிவில் இந்தியாவின் பிரியங்கா வெள்ளி பதக்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 43.38 என்ற நிமிடங்களில் கடந்து, 2வது இடத்தை பிடித்து, வெள்ளி பதக்கத்தை அடைந்தார். ஏற்கெனவே ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.08 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், அதற்கு முன்பாக இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் உயரம் தாண்டுதலில் 2.12 மீட்டர் உயரத்தை தாண்டி வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியிருந்தார்.

இவர்களை தொடர்ந்து தற்போது தடகளத்தில் இந்தியாவிற்கு மூன்றாவது பதக்கம் கிடைத்துள்ளது. மேலும், மல்யுத்தத்தில் ஆடவர் ப்ரீஸ்டைல் 86 கிலோ பிரிவில் தீபக் புனியா 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானின் முஹம்மது இனாமைத்தை வீழ்த்தி தங்க பதக்கம் வென்று அசத்தினார். காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இதுவரை 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என்று 26 பதக்கங்களுடன் 7வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா 50 தங்கம், 44 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 140 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. நேற்று பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Tags : India ,Commonwealth Games ,Priyanka , Commonwealth, India, Walking, Women's Category, Silver Medal, Priyanka
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்