வீடியோ காலில் எம்பி நிர்வாண போஸ்; ஆந்திர முதல்வர் கடும் அப்செட்: சஸ்பெண்ட் செய்ய திட்டம்

திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கதிரி காவல் ஆய்வாளராக இருந்தவர் கோரண்ட்லா மாதவ். இவர் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது அக்கட்சி எம்பி திவாகர், போலீசார் குறித்து அவதூறாக பேசியதால் தனது மீசையை முறுக்கி, போலீசார் குறித்து அவதூறாக பேசினால் நாக்கை அறுப்பேன் என கூறினார். பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் தனது காவல் ஆய்வாளர் பதவியை ராஜினாமா செய்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் 2019ம் ஆண்டில் இந்துபுரம் எம்பியாக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், எம்பி கோரண்ட்லா மாதவ் பெண் ஒருவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போது அந்த பெண்ணுக்கு தனது அந்தரங்க உறுப்பை காண்பிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்த கோரண்ட்லா மாதவ், ‘தெலுங்கு தேசம் கட்சியினர் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மார்பிங் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து எஸ்பியிடம் புகார் செய்திருக்கிறேன். இந்த வீடியோ தொடர்பாக எவ்விதமான விசாரணைக்கும் நான் தயார்.

இந்த வீடியோவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். அந்த வீடியோ என்னுடையது அல்ல என தெரிவித்தார். யாரோ மார்பிங் செய்து பதிவிட்டாலும் ஒட்டுமொத்த மாநில மக்களும் கோரண்ட்லா மாதவ் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மறுபுறம், கட்சி தலைவரும், முதல்வருமான ஜெகன்மோகன் கடும் கோபத்தில் உள்ளார். இதுதொடர்பாக கட்சி தலைவர்களிடம் நடந்த விவரங்களை கேட்டு தெரிந்து கொண்ட நிலையில் கோரண்ட்லா மாதவ் எந்த நேரத்திலும் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Stories: