2014ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து

சென்னை; 2014ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014ல் தமிழீழ விவகாரம் தொடர்பாக சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி 11 மாணவர்கள் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது என கூறி வழக்கை ரத்து செய்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

Related Stories: