×

ஐஸ்லாந்து நாட்டில் வெடித்துச் சிதறும் எரிமலை: எச்சரிக்கையையும் மீறி எரிமலை வெடிப்பை காணக் குவியும் மக்கள்

ஐஸ்லாந்து: ஐஸ்லாந்து நாட்டின் சர்வதேச விமான நிலையம் அருகே இரு தினங்களுக்கு முன்னர் வெடிக்க தொடங்கிய எரிமலையிலிருந்து லாவா குழம்பு வழிந்தோடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. ஐஸ்லாந்து தலைநகரான ரேக்ஜவிக்கிள் இருந்து 32கி.மீ. தொலைவிலும், அந்நாட்டின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது ஃபக்ராடால்ஸ்பியால் எரிமலை. அந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே சில அதிர்வு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 3ம் தேதி எரிமலை வெடிக்க தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் எரிமலையிலிருந்து புகையுடன் கூடிய லாவா குழம்பு வெளியேறி வருகிறது.

எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எரிமலை வெடித்துச் சிதறுவதை காண, அப்பகுதியில் எச்சரிக்கையும் மீறி ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். அதேபோல விமான போக்குவரத்தும் தடையின்றி செயல்பட்டு வருகிறது. எரிமலை வெடிப்பின் தொடக்க கட்டத்தில் அதன் பாதிப்புகளை முழுமையாக கூறமுடியாது என்றாலும் அதிலிருந்து விஷவாயுகள் வெளியேறும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு இதே எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு சுமார் 6 மாதங்கள் வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது. 


Tags : Iceland , Iceland, volcanic eruption, warning, people
× RELATED ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை …...