×

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

*ஏற்றுமதி செய்ய முடியாமல் வியாபாரிகள் தவிப்பு

* ஒரு கோடி செங்கல்கள் மழையில் நனைந்து நாசமானதால் வேதனை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக செங்கல் தொழில் செய்பவர்கள் மற்றும் செங்கல் வியாபாரிகள் செங்கல் உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளி மாநில மற்றும் மாவட்டங்களுக்கு செங்கல் ஏற்றுமதி செய்ய முடியாமல் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் அகர்பத்தி, பீடி சுற்றுதல் தொழில் பிரதான தொழிலாக பொதுமக்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக செங்கல் சூளை அமைத்து வியாபாரம் செய்துவருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதியூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, நாட்றம்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கானோர் செங்கல் சூளையை விவசாய நிலங்களில் அமைத்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன்.

செங்கல் தயாரிப்புக்கு வண்டல் மண்ணை எடுத்து அதனை கூழாக்கி அதன் பிறகு செவ்வக வடிவில் அச்சு அமைத்து அதன் பின்னர் ஒரு செங்கல் சூளையில் பல ஆயிரக்கணக்கான செங்கல்களை அடுக்கி வைக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தி தரமான செங்கல் உருவாக்கப்படுகிறது. இங்கு உருவாக்கப்படும் செங்கற்கள் அனைத்தும் சென்னை, பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது ஒரு செங்கல் விலை ₹8 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த செங்கல் சூளைகளால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக வேக வைக்காத பச்சையாக உள்ள அறுத்த செங்கல்கள் அனைத்தும் நீரில் கரைந்து பல லட்ச கணக்கான செங்கல் நாசமாகி உள்ளது.

இதனால் ஏற்றுமதி செய்ய முடியாமலும் செங்கல் சூலையில் செங்கல்களை அடுக்கி வைத்து தீயிட்டு கொளுத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி அளவிலான செங்கல்கள் அனைத்தும் நீரில் கரைந்து நாசமாகி உள்ளதாக செங்கல் வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆதியூர் செங்கல் சூளை தயாரிப்பு சங்க தலைவர் கார்த்தி கூறுகையில், மாவட்டத்தில் செங்கல் திருப்பத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் தான் அதிக அளவில் தயார் செய்யப்படுகிறது.

இங்கு உள்ள வண்டல் மண் தரமான மண் என்ற காரணத்தினால் தரமான செங்கல் தயாரிக்கப்படுவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த இரண்டு மாத காலமாக மழையின் காரணமாக செங்கல் சூளையில் பச்சைக் கல்களை அறுத்து அதனை வேக வைக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.தொடர் மழை காரணமாக சுமார் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் பல லட்சம் மதிப்பிலான செங்கல்கள் நாசமாகி தண்ணீரில் கரைந்து வீணாகி உள்ளது. இந்த தொழிலே நம்பி வந்தவர்கள் நஷ்டத்தில் தவித்து வருகின்றனர். எனவே செங்கல் சூளை நடத்துபவர்கள் மழையினால் நாசமானது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நஷ்ட ஈடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்று இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Thirupattur district , Tirupattur: Due to continuous rains in Tirupattur district, brick makers and brick dealers
× RELATED ஒரு வாரமாக பெய்த மழையால் வாணியம்பாடி...