கலவை அரசு பள்ளியில் விழிப்புணர்வு டெங்கு அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை பெற வேண்டும்-வட்டார மருத்துவ அலுவலர் பேச்சு

கலவை : டெங்கு அறிகுறிகள் இருந்தால், சிகிச்சை பெற வேண்டும் என்று கலவை அரசு பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் பேசினார்.கலவை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  சுகாதார துறை சார்பில் டெங்கு கொசு மற்றும் காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சனாவுல்லா, சுகாதார ஆய்வாளர் அருண், உதவி தலைமையாசிரியர் செந்தில்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுகாதார ஆய்வாளர் பிரபு, வரவேற்றார்.  இதில், சிறப்பு அழைப்பாளராக  திமிரி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கவுதம்ராஜ் , கலந்துகொண்டு மாணவர்களிடத்தில் பேசினார், அப்போது அவர் பேசுகையில், இந்த டெங்கு கொசுக்கள் நமது வீட்டில் உடைந்த பாத்திரங்கள், பாட்டில், தேங்காய் சிரட்டை , ஆட்டுக்கல் போன்ற பொருட்களில் தேங்கியிருக்கும் நீரில் உற்பத்தியாகிறது.

எனவே மாணவச் செல்வங்கள் அவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும், டெங்கு காய்ச்சல் அறிகுறி 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் தலைவலி, கை, கால், மூட்டுகளில் வலி கண்களின் பின்புறம் வலி மற்றும் தோலில் சிறு சிறு சிறு சிகப்பு  தடிப்புகள் இவைகள் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள், இப்படிப்பட்ட நோய்களுக்கான அதிகம் உங்கள் வீட்டில் அல்லது ஊரில் எவருக்கேனும் தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற வலியுறுத்த வேண்டும்.

விழிப்புடன் இருப்போம், டெங்குவை ஒழிப்போம்  என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியின்  ஆசிரியர்கள், மாணவர்கள், அம்மா சுகாதாரத்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சரவணன், நன்றி கூறினார்.

Related Stories: