சித்தூர் மண்டல வருவாய் துறை அலுவலகத்தில் நிறுத்திய உதவித்தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளி மனு

சித்தூர் : சித்தூர் மண்டல வருவாய் துறை ஆபீசில் நிறுத்திய உதவித்தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளி மனு அளித்துள்ளார்.சித்தூர் மண்டல வருவாய் துறை அலுவலகத்தில் பீரய்யா மாற்றுத்திறனாளி என்பவர், இணை அதிகாரி ஸ்ரீநிவாசிடம் புகார் மனு வழங்கினார். அந்த மனுவில், ‘நான் சித்தூர் ஓபன்பள்ளி காலனியை சேர்ந்தவர். என்னுடைய அம்மா சரஸ்வதி(83). தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டார். அம்மாவும் நானும் தனியாக வசித்து  வருகிறோம். மாநில அரசு மாற்றுத்திறனாளியான எனக்கு மாதம் ₹5 ஆயிரம் உதவித்தொகை  வழங்கி வந்தது.

ரேஷன் கார்டில் எனக்கும் எனது தாய்க்கும் சேர்த்து மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. இதை பெற்று குடும்பம் நடத்தி வந்தோம். ஆனால், கடந்த 6 மாதங்களாக மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்கவில்லை. ரேஷன் அரிசியும் வழங்கவில்லை. இதுகுறித்து கிராம வருவாய் துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தேன். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற இணை அதிகாரி ஸ்ரீநிவாஸ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Related Stories: