×

வரலட்சுமி நோன்பையொட்டி நெல்லையப்பர் கோயிலில் பெண்கள் 1008 சுமங்கலி பூஜை

நெல்லை : நெல்லை டவுன்  நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோயிலில் வரலட்சுமி நோன்பையொட்டி  1008 சுமங்கலி பூஜையில் குடும்ப நன்மை வேண்டி திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில்  இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், கோயில் கிளை கமிட்டியுடன் இளைய பாரதம் இணைந்து நடத்திய 7வது ஆண்டு வரலட்சுமி  நோன்பையொட்டி நேற்று காலையில் அம்பாள் சன்னதியில் 1008 சுமங்கலி பூஜை  நடந்தது. இதையொட்டி அம்மன் சன்னதியில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து குடும்ப நன்மை வேண்டி திரளான சுமங்கலி பெண்கள் பூஜையில் பங்கேற்றனர்.

இந்து  ஆலய பாதுகாப்பு இயக்கம், நெல்லையப்பர் காந்திமதிமதி அம்பாள் கோயில் கிளைக்  கமிட்டியினர், ராஜகோபால், குணசீலன், ஐகோர்ட் மகாராஜா, மணிகண்ட மகாராஜன்,  நிதிஷ்முருகன், ஆதிமூலம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த பூஜையில்  பங்கேற்ற பெண்கள் கலசெம்பு, மஞ்சள் தடவிய தேங்காய்கள், தாம்பூல தட்டு,  கற்பூர தட்டு, மஞ்சள், குங்குமம், தாலிக் கயிறு வெற்றிலை, பாக்கு வைத்து வரலட்சுமி வேண்டி வணங்கி வழிபாடு செய்தனர்.

அம்மன் சன்னதி ஆயிரங்கால் மண்டபம், கொடிமரம் பகுதி, சங்கிலி மண்டபம், வெளி பிரகாரங்களில் 1008 சுமங்கலிகள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடந்தது. இதில் குடும்பத்துடன் திரளான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி, நெல்லையப்பர் காந்திமதி அம்மனை வழிபட்டனர்.

Tags : Sumangali Pooja ,Nellayapar Temple ,Varalakshmi , Nellai : Family benefit at 1008 Sumangali Puja on the occasion of Varalakshmi fast at Gandhimati Ambal Temple, Nellai town, Nellaiappar.
× RELATED என்.ஐ.ஏ.விடம் இருந்து தனக்கு சம்மன்...