மார்கரெட் ஆல்வா vs ஜெகதீப் தன்கர்..வெல்லப்போவது யார்?: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.. ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் மோடி..!!

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்‍காலம் முடிவடைவதை ஒட்டி, புதிய குடியரசுத் துணை தலைவரை தேர்ந்தெடுக்‍க தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் போட்டியிருக்கிறார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரான மார்கரெட் ஆல்வா களமிறங்கி உள்ளார். குடியரசுத் துணை தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்க பாடுபடுவேன் என்றும்  தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி ஒவ்வொரு எம்.பிக்கும் எதிர்க்‍கட்சிகளின் வேட்பாளரான மார்கரெட் ஆல்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று நடைபெறும் குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 788 பேர் வாக்களித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். மாலை 5 மணிக்கு தேர்தல் முடிந்ததும் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. தற்போதைய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் முடிவடைகிறது.

Related Stories: