அடையாறு ஆற்றங்கரையையொட்டி ரூ.2 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு அதிகாரிகள் அதிரடி

ஸ்ரீபெரும்புதூர்:வரதராஜபுரம் அடையாறு ஆற்றங்கரையையொட்டி உள்ள ரூ.2 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை வருவாய் துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். குன்றத்தூர் ஒன்றியம், வரதராஜபுரம் பகுதியில் அடையாறு ஆற்றங்கரையை பொதுப்பணித்துறை சார்பில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராயப்பா நகரில் அடையாறு கரையை ஒட்டி 50 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்புகள் வீடுகள் கட்டபட்டுள்ளது. இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இந்த புகாரை தொடர்ந்து குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், நீர்நிலை பகுதியில் குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமாார் ரூ.2 கோடி என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: