உலக யு-20 தடகளம் 2 பதக்கம் வென்று ரூபல் சாதனை

கொலம்பியாவில் நடைபெறும் உலக யு-20 தடகள சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீராங்கனை ரூபல் சவுதாரி 2வது பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உத்தரபிரதேசம் ஷாபூர் ஜெயின்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான ரூபல் (17 வயது), மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் (51.85 விநாடி) 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இங்கிலாந்தின் யெமி மேரி ஜான் (51.50 வி.) தங்கப் பதக்கமும், கென்யாவின் டமாரிஸ் முட்டுங்கா (51.71 வி.) வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். ஏற்கனவே மகளிர் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் (ரிலே) வெள்ளி வென்றிருந்த ரூபல், உலக யு-20 தொடரில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

Related Stories: