மாணவி படத்தை ஆபாசமாக மார்பிங் செய்த வாலிபர்: உதவிய சென்னை நண்பன் கைது

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த 21 வயது இளம்பெண், வேலூர் சட்டக்கல்லூரியில் படிக்கிறார். இவருக்கும் சேதாரம்பட்டில் தனியார் நிறுவன ஊழியர் விஜயகுமாருக்கும் நட்பு ஏற்பட்டது. கடந்த ஜூன் 4ம் தேதி மாணவியின் படத்தை ஆபாசமான மார்பிங் செய்து வாட்ஸ் அப்பில் விஜயகுமார் அனுப்பினார். இதுபற்றி மாணவி வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து படத்தை மார்பிங் செய்ய விஜயகுமாரின் நண்பர் சென்னை திருவேற்காட்டை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அசோக்குமாரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான விஜயகுமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: