கோவில்பட்டி அரசு கல்லூரியில் பேராசிரியர் மீது தாக்குதல் 2 மாணவர்கள் சஸ்பெண்ட்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருப்பவர் சிவசங்கரன் (45). நேற்று முன்தினம் இவர், கல்லூரியில் தனது அறையில் இருந்தார். அங்கு வந்த மாணவர்கள் 4 பேர் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் சிவசங்கரன் மயங்கி விழுந்தார். உடனே அவரை அலுவலக ஊழியர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், கணிதத் துறையில் ஒரு மாணவர், சக மாணவியை காதலித்ததை கண்டித் அவர்களது பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இதனால் ஆத்திரமடைந்த மாணவர், மேலும் 3 மாணவர்களை அழைத்து வந்து தாக்கினார் என்று கூறியுள்ளார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

இதற்கிடையில் பேராசிரியர் சிவசங்கரை தாக்கியதாக 2 மாணவர்களை கல்லூரி முதல்வர் நிர்மலா சஸ்பெண்ட் செய்தார். மேலும் பேராசிரியர் சிவசங்கரன் நடத்தை குறித்து புகார் புகாரின்படி அவரை கல்லூரிக் கல்வி துணை இயக்குநர் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: