எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் 75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம்

சென்னை: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவோம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் 75வது சுதந்திர தினம் வருகிற 15.8.2022 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதை கொண்டாடும் விதமாக சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற பெயரில் ஒன்றிய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. தேசியக் கொடி என்றவுடன் நமது நினைவுக்கு வருவது கொடி காத்த குமரன் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திருப்பூர் குமரன்தான். அந்நியர் ஆட்சியில், நமது தேசிய கொடியை காப்பதற்காக இன்னுயிரை தியாகம் செய்த கொடி காத்த குமரன் முதல் அனைத்து தியாகிகளையும் தீரர்களையும் 75வது சுதந்திர தின நன்னாளில் நினைவு கூர்வோம். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், அவரவர் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி நாட்டுப் பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

Related Stories: