கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், புதிய காப்பீடு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு காப்பீடு அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து, போதை மாத்திரை பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்டெடுக்கும் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 1794ம் ஆண்டு மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கப்பட்ட கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம், 228 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதார், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமலேயே காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் இன்று (நேற்று) 520 பேருக்கு காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் 311 ஆண்கள், 209 பெண்கள். ஒப்பியாயிட் மாற்று சிகிச்சை திட்டம் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 400 பேர் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: