தலைமை செயலாளர் உத்தரவு: தமிழக அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சில அலுவலர்களுக்கு ஓய்வு பெறும் நாளன்றோ அல்லது சில நாட்களுக்கு முன்னரோ பதவி உயர்வு வழங்க செயற்கையாக காலிப்பணியிடங்கள் ஏற்படுத்துதல் மற்றும் பதவி நிலை உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் அறிவுறுத்தங்களுக்கிணங்க ஒவ்வோர் ஆண்டும் காலதாமதமின்றி உரிய காலத்தில் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டு முறையான பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும். சில அரசு அலுவலர்களுக்கு சாதகமான வகையில் அவர்கள் ஓய்வு பெறுவதற்கு சிலநாட்கள் முன்னதாகவோ, அவர்கள் ஓய்வு பெறும் நாளன்றோ அல்லது பதவி உயர்வுக்கான அவர்தம் முறை வரும் முன்னரோ பதவி உயர்வு வழங்கும் வகையில் செயற்கையாக காலிப்பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்கும் செயல்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.

Related Stories: