ஆர்.கே.பேட்டை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழுத் தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் (திமுக) தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணைத் தலைவர்  திலகவதி ரமேஷ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்  செ.செ.சேகர் வரவேற்றார். சமீபத்தில் திமுக வில் இணைந்த ஒன்றிய குழுத் தலைவருக்கு  திமுக உறுப்பினர்கள்  வாழ்த்து தெரிவித்தனர்.  

கூட்டத்தில்  வரவு செலவு கணக்கு விவரங்கள் வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலாளர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.  முன்னதாக   திமுகவில் இணைந்த ஒன்றிய குழுத் தலைவரை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள்  கண்களுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு கூட்டத்தில் பங்கேற்று ஒன்றிய குழுத் தலைவர் பேச தொடங்கியதும் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: