கலைஞரின் 4ம் ஆண்டு நினைவுநாள் மாற்றுத்திறனாளிகள் நாளை அமைதி பேரணி; சங்க மாநில தலைவர் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்க மாநில தலைவரும், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினருமான ரெ.தங்கம் வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் பொற்கால ஆட்சியில் ஊனமுற்றோர் என்ற சொல்லை நீக்கி, மாற்றுத் திறனாளிகள் என பெயர் சூட்டினார். அவர்களுக்கு தனி நலவாரியம், தனித் துறையினை அமைத்து, அத்துறையினை தனது நேரடி கட்டுப்பாட்டில் தனி அமைச்சகம் கொண்டு வந்தார். அத்துடன் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பஸ்களில் கட்டணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்.

இந்நிலையில் இந்தாண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து, எனது தலைமையில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்களது இணைப்பு சக்கர (ஸ்கூட்டி) வாகனத்தில் அமைதி பேரணியாக புறப்பட்டு, கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். இந்த பேரணியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: