×

தொடர்ந்து ஏறுமுகம்: ஒரு சவரன் தங்கம் விலை ரூ.39,000

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சவரன் ரூ.39 ஆயிரத்தை தொட்டதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. கடந்த மாதம் 28ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.38,136க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் 22 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. 29ம் தேதி ஒரு சவரன் ரூ.38,440, 30ம் தேதி ரூ.38,520, 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது.

1ம் தேதி சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.38,360க்கு விற்கப்பட்டது. 2ம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. 2ம் தேதி சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,560, 3ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4802க்கும், சவரன் ரூ.38,416க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.63 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,865க்கும், சவரனுக்கு ரூ.504 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,920க்கு விற்கப்பட்டது. நேற்று காலை மற்றும் மாலையில் தங்கம் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்று முன்தினம் விலையிலேயே விற்பனையானது.

Tags : Continually ascending, A Sawaran gold price is Rs.39,000
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...