×

பிரமோற்சவத்தின்போது பக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி வழங்க தினம் 9 லட்சம் லட்டுகள்: அறங்காவலர் குழு தலைவர் ஏற்பாடு

திருமலை: திருப்பதியில் வருடாந்திர பிரமோற்சவத்தின் போது பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்க, தினமும் 9 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம், திருமலை அன்னமய்யா பவனில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்திற்கான ஏற்பாடுகள் குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு  தலைவர் சுப்பா நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அவர் பேசியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கி, அக்டோபர் 5ம் தேதி 9ம் நாள், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. இலவச தரிசனத்தில்   மட்டுமே தரிசிக்க முடியும். விஐபி தரிசனம், ரூ.300 தரிசனம், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் மற்றும் பிற முன்னுரிமை தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்படும். தினமும் 9 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு தட்டுபாடின்றி வழங்கப்படும். பக்தர்களுக்காக இலவச பஸ்கள் இயக்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Pramotsavam ,Committee , Pramotsavam, Devotees, Board of Trustees
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...