செஸ் ஒலிம்பியாட் 7வது சுற்று தொடங்கியது!: முதன்முறையாக இந்திய ஏ vs இந்திய சி அணிகள் நேருக்கு நேர் மோதல்..!!

சென்னை: மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 7வது சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்றைய ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று 7வது சுற்று போட்டி தொடங்கியிருக்கிறது. 186 நாடுகள் இடையிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. ஓபன், பெண்கள் ஆகிய இரு பிரிவுகளில் நடக்கும் இந்த செஸ் திருவிழா 11 சுற்றுகளை கொண்டது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை குவிக்கும் அணி மகுடம் சூடும். இதுவரை 6 சுற்று நிறைவடைந்து தற்போது, 7வது சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதன்முறையாக இந்திய ஏ, சி அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஏ அணியில், ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ், அர்ஜூன் எரிகேசி, நாராயணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்திய சி அணியில் சூர்யா சேகர், சேதுராமன், அபிஜித் குப்தா, அபிமன்யு புராணிக் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பொது பிரிவில் இந்தியா பி அணி கிரீஸ் அணியை எதிர்கொள்கிறது. மகளிர் பிரிவில் வலுவான இந்திய அணிகள் அசர்பெய்ஜான், கிரீஸ், ஸ்விட்சர்லாந்துடன் மோதுகின்றன. இந்திய ஏ vs இந்திய சி அணிகள் மோதலில் வெல்வது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சசிகிரண், கார்த்திகேயன், ரோனக் சத்வானி ஆகியோருக்கு இன்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: