நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புகோரிய திருவண்ணாமலை வட்டாட்சியருக்கு ஐகோர்ட் தண்டனை

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புகோரிய கலசப்பாக்கம் வட்டாட்சியர் லலிதா ஒருநாள் நீதிமன்றத்தில் இருக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுக்கா கடலாடி கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி முருகன் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை 12 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் எனவும் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அப்போதைய பெண் தாசில்தார் லலிதா என்பவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை 2 நாட்களுக்கு முன்பாக விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்ததாக கருதி, கலசப்பாக்கம் தாசில்தாரை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.

அவரது தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுவதால், அவர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபொழுது, தாசில்தார் லலிதா ஆஜரானார். அப்பொழுது இந்த ஆக்கிரமிப்பு அகற்றாதது குறித்து மன்னிப்பு கூறினார். அந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கில் கடுமையான தண்டனை வழங்க தலைமை நீதிபதி முடிவு செய்தபோது, சக நீதிபதிகள், இன்று ஒருநாள் மட்டும் நீதிமன்றத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை கவனிக்கும்படி தண்டனை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த ஆக்கிரமிப்பை 3 வாரங்களில் அகற்றிவிட்டு, அறிக்கையை தாக்கல் செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: