கும்மிடிப்பூண்டி அருகே ரூ.20 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்தார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி ஊராட்சியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி, அங்கு புதிதாக ஒரு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு ரூ.19.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவு பெற்றன.

இந்நிலையில், தேர்வழி ஊராட்சியில் ரூ.19.5 லட்சத்தில் புதிய 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நேற்று தேர்வழி கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கிரிஜா தலைமை தாங்கினார். இதில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று, மக்களின் பயன்பாட்டுக்கு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைத் திறந்து வைத்தார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவகுமார், துணை தலைவர் மாலதி, ஒன்றிய செயலாளர் மணிபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், ஒன்றிய கவுன்சிலர் அமலா, ஒன்றிய பிரதிநிதி ரமேஷ், துணை செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: