உத்திரமேரூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்: சுந்தர் எம்எல்ஏ திறந்தார்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டது. மேலும் பேதிய இடவசதியும் இல்லாமல் இருந்தது. இதனால் அரசாங்க கோப்புகளை பாதுகாப்பதில் சிக்கல் நிலவி வந்தது. இதனை போக்கும் விதமாக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் வட்டாட்சியர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், குமார், நகர செயலாளர் பாரிவள்ளல் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் பொன். சசிகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் லதா, மாவட்ட பிரதிநிதி குணசேகரன், கோவிந்தராஜன் உட்பட அரசு அலுவலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: