×

அதிமுக விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகினார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி...

சென்னை: அதிமுக விவகாரம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினார். அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் தன்னை மாற்ற வேண்டுமென்று தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கு  நேற்று பட்டியலிடப்பட்டிருந்த நிலையில் நேற்று முன் தினமே தலைமை நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரில் இந்த வழக்கை வேறு ஒரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதியிடம் முறையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது சில கண்டனங்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஓபிஎஸ்க்கு இது கீழ்த்தனமான செயல் என்றும், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பே பட்டியலிடப்பட்டிருந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி நாங்கள் கூறியது எந்த ஒரு தனிப்பட்ட கருத்துக்கள் இல்லை என்றும், தங்களுக்கு எதிரான உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும், நடைமுறை சிக்கல் காரணமாகத்தான் தெரிவித்தாகவும் இதற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் , மன்னிப்பு கேட்டுகொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்ப பெற்று கொண்டோம் என்று மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஓபிஎஸ் தரப்பு மனுவை தாக்கல் செய்வதாகவும், இந்த வழக்கை உங்களிடமே விசாரணை நடத்துகின்றோம் என்றும் அதற்கான கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் கேட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி நீங்கள் மன்னிப்பு கேட்டு ஒரு மனுதாக்கல் செய்ய வேண்டும் என ஒரு கோரிக்கையை முன் வைத்தார். அதற்கு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் நாங்கள் மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்ய முடியாது என்று பதிலளித்தார்.

நீதிபதி இந்த விஷயத்தை 2 நாட்களுக்கு முன்பே என்னிடம் தெரிவித்திருந்தால் இந்த வழக்கில் இருந்து நானே விலகியிருப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். எனவே, தலைமை நீதிபதியிடம் அளித்த தனிநீதிபதிக்கு எதிரான புகார் குறித்த மனுவை திரும்ப பெற்று கொண்டோம் என்ற மனுவை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு மனுவை தாக்கல் செய்ய இருக்கின்றனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெறும். இந்நிலையில் வேறு நீதிபதியிடம் மாற்ற வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்க மறுத்த நிலையில், அதிமுக தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினார்.  



Tags : Justice ,Krishnan Ramasamy ,OPS ,AIADMK , AIADMK, Affairs, OPS, case, resigned, Judge, Krishnan Ramasamy
× RELATED புதிய நீதிமன்றம் தொடக்கம்