×

கோவில்பட்டி அரசு கல்லூரியில் பேராசிரியர்- மாணவர்கள் இடையே மோதல்: 3 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியர், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 மாணவர்கள் மற்றும் 1 பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவில்பட்டியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் குறித்து அவர்களது பெற்றோர்களிடம் தவறான தகவலை தெரிவித்ததாக கணிதத்துறை பேராசிரியர் சிவசங்கரனுக்கும், மாணவர்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தரக்குறைவாக விமர்சித்து தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பேராசிரியர் சிவசங்கரன், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக, பேராசிரியர் சிவசங்கரன் மற்றும் மாணவர்கள் கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் கல்லூரி முதல்வர் நிர்மலா இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் 2ம் ஆண்டு பயிலும் மாணவர் சிவசுந்தரராமன், பி.ஏ.தமிழ் 3ம் ஆண்டு மாணவர் சுரேஷ் குமார் மற்றும் கணித்துறை பேராசிரியர் சிவசங்கரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    


Tags : Govilpatti Government College ,Chief of the College , Kovilpatti, Govt College, Professor- Students, Conflict, Suspended, College Principal
× RELATED உலக மகளிர் தினவிழா