×

தமிழகத்தில் தொடரும் கனமழை: வெள்ள மீட்புப் பணியில் 312 பேர்..முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்..அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் விளக்கம்..!!

சென்னை: தமிழகத்தில் தொடர்மழை, கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

1.    மழை விபரம்:

தென் மேற்கு பருவமழைக் காலத்தில், 01-06-2022 முதல் 04-08-2022 முடிய 256.3 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 99 விழுக்காடு கூடுதல் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில், 35 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 10.59 மி.மீ. ஆகும்.

2. அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


1)    நீலகிரி    67.50 மி.மீ.    
2)    கோயம்புத்தூர்    53.46 மி.மீ.    
3)    தருமபுரி 38.63 மி.மீ.    
4)    திருவண்ணாமலை 23.27 மி.மீ.    
5)    தேனி 15.68 மி.மீ.    
6)    கிருஷ்ணகிரி 12.52 மி.மீ.    
7)    விழுப்புரம் 12.24 மி.மீ.    
8)  திண்டுக்கல் 10.41 மி.மீ.    
9)     ஈரோடு    9.73 மி.மீ.
10)    திருப்பூர் 8.46 மி.மீ.
11)    திருவள்ளூர்    8.40 மி.மீ.
12)    கள்ளக்குறிச்சி    8.40 மி.மீ.
13)    சேலம்     6.53 மி.மீ.
14)    வேலூர்    6.30 மி.மீ.
15) தென்காசி 6.30 மி.மீ.
16)    திருவாரூர் 5.54 மி.மீ.

3. மிக கனமழை விபரம் (115.6 முதல் 204.4 மி.மீ வரை):

வ. எண்.    மாவட்டம்    மழைமானி நிலையம்    பதிவான மழை அளவு (மி.மீ.)
1    நீலகிரி    அவலாஞ்சி    200
2   தேவாலா 181
3    நடுவட்டம்    152
4    மேல் பவானி 140
5    கோயம்புத்தூர் சின்னக்கல்லார்    194
6    சோலையாறு 132



4. கனமழை விபரம் (64.5 முதல் 115.5 மி.மீ வரை) :

வ. எண்.    மாவட்டம்    மழைமானி நிலையம்    பதிவான மழை அளவு (மி.மீ.)
1    நீலகிரி    வட்டாட்சியர் அலுவலகம், பந்தலூர்    110
2    ஹரிஜன் மலையாளம் லிமிடெட்,     81
3    கூடலூர் பஜார்75
4    உதகை    74.5
5    கோயம்புத்தூர் வால்பாறை பி.ஏ.பி 107
6    வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம்    106
7    சின்கோனா    93
8    திருவண்ணாமலை திருவண்ணாமலை 88.3
9    தருமபுரி பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம்    76
10    தேனி பெரியாறு    75.4

5. நிவாரண முகாம்களின் எண்ணிக்கை:


வ.
எண்.    மாவட்டம்    நிவாரண முகாம்களின் எண்ணிக்கை    குடும்பங்களின் எண்ணிக்கை     ஆண்கள்    பெண்கள்    குழந்தைகள்     மொத்தம்
1    தர்மபுரி           1    3    6    4    0    10
2    ஈரோடு           14    369    519    543    215    1277
3    கரூர்           3    96    128    147    15    290
4    கிருஷ்ணகிரி    1    13    14    26    0    40
5    மயிலாடுதுரை    1    23    15    20    10    45
6    நாமக்கல்       14    560    637    675    231    1543
7    சேலம்            1    8    11    7    5    23
8    தஞ்சாவூர்       6    119    195    218    31    444
9    நீலகிரி           2    17    14    19    22    55
10    திருச்சிராபள்ளி    6    119    69    168    71    308
   மொத்தம்        49 1327 1608 1827 600 4035

நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

6. வானிலை முன்னெச்சரிக்கை

* 05.08.2022 – கனமழை முதல் மிக கனமழை – நீலகிரி மாவட்டம்
* கனமழை – கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல்
* 06.08.2022 – கனமழை - நீலகிரி மற்றும் கோயம்புத்தூர்
* 07.08.2022 அன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
* 08.08.2022 அன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
* 5.8.2022 அன்று குமரிமுனை, மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில்,  இந்த எச்சரிக்கை செய்தி, மீன்வளத் துறை மூலமாக மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. முன்னெச்சரிக்கை    

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், அதி கனமழைப் பொழிவு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை 8.45 மணி முதல் 1,80,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கண்காணிப்பு அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பவானிசாகர் அணையிலிருந்து விநாடிக்கு 7,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 89,692 செல்லிடப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது. பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண்.

94458 69848 மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம். கன மழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2 குழுக்களும், நீலகிரி மாவட்டத்தில் 2 குழுக்களும், நாமக்கல் மாவட்டத்தில் 1 குழுவும், ஆக மொத்தம் 110 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.  மேலும், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 238 வீரர்களைக் கொண்ட 6 குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  இதுமட்டுமின்றி, பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அரசு மற்றும் மாவட்ட நிருவாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து செயல்படுமாறும், மாவட்ட நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Tamil Nadu ,Minister ,K. K. ,R.R. , Tamil Nadu, heavy rain, flood rescue work, precautionary, Minister Ramachandran
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...